×

காடு மலை தாண்டி வெற்றி பெறுமா சர்வைவர்?...

நடிகர் சிவகார்த்திகேயன் சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் காட்சி டிரைலரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 
76816d0e-99b5-4aa3-bc7e-45ef0a6a3b49

தென்னிந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகவிருக்கும் இது போன்ற ஒரு ரியாலிட்டி மற்றும் டிராமா கலந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஸ்டார் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். 

ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் உள்ள எழில்மிகு சான்சிபார் தீவுகளில், போட்டியாளர்கள் எப்படி இயற்கையின் ஆற்றலை எதிர்கொண்டு 90 நாட்கள் தாக்குப்பிடித்து வாழப்போகிறார்கள் என்பதையே இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு காட்டவிருக்கிறது.

arj

நடிகர் சிவகார்த்திகேயன் சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் காட்சி டிரைலரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதியன்று உறுதிசெய்யப்பட்ட போட்டியாளர்கள் பற்றிய விவரங்களுடன் கூடிய ஒரு டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

மனித நடமாட்டம் இல்லாத அந்த தீவில் போட்டியாளர்கள் எப்படி மனம் தளராமல் உறுதியுடன் இருக்கிறார்கள் என்கிற இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் பிரம்மாண்டம், ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக இந்த வரும் செப்டம்பர் 12 முதல் தினமும் இரவு 9:30 மணிக்கு  ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

arjun

பிரபல நடிகர்கள் நந்தா, மற்றும் விக்ராந்த், சென்னை 28 திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய நடிகர் பெசன்ட் ரவி, பிரபல மாடல் மற்றும் நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகனும் - வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான உமாபதி ராமையா, விஜே பார்வதி ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

சர்வைவர் நிகழ்ச்சியை வழிநடத்தி வழங்கும் தொகுப்பாளர் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன். சர்வைவரின் 90-நாள் பயணம் எப்படி இருக்கும், போட்டியாளர்கள் எத்தகைய சாகசங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள போகிறார்கள் என்பது பற்றிய எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News