ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு... மீண்டும் இணையும் 'நூறு சாமி' கூட்டணி!
Updated: Jul 1, 2026, 18:49 IST
விஜய் ஆண்டனி, அஜய் திஷனை வைத்து இயக்குநர் சசி இயக்கிய புதிய படம் 'நூறு சாமி'. சமீபத்தில், ரிலீஸ் ஆன இப்படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்திருந்தார். இதை விஜய் ஆண்டனி அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதுவரை இந்த படம் உலக அளவில் ரூ.11.47 கோடி வசூல் செய்துள்ளது.
தற்போது, விஜய் ஆண்டனி மீண்டும் இயக்குநர் சசியுடன் கூட்டணி அமைக்கவிருக்கிறார். ஆனால், இந்த படத்தை தயாரிக்கப்போவது மட்டுமே விஜய் ஆண்டனியாம்.
இதில் ஹீரோவாக அஜய் திஷன் நடிக்கப்போகிறாராம். இதற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கை விரைவில் துவங்கவிருக்கிறாராம் சசி.
