×

திமுகவின் B டீம்தான் சசிகலாவா? - உண்மை நிலவரம் என்ன?..

 

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தமிழகம் திரும்பியுள்ளார் சசிகலா. மேலும் அதிமுகவினர் ஒற்றுமையாக செயல்பட்டு திமுகவை எதிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். எனவே, சசிகலா விரைவில் அதிமுகவோடு இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருபக்கம் ‘எங்களுக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனைதான்’ என அமைச்சர் வேலுமணி பேசியிருந்தார்.  எனவே, விரைவில் அதிமுக, அமமுக இணையும் என அரசியல் விமர்சகர்கள் கருதினர். 

ஆனால், அதில் உண்மையில்லை. ‘அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சியினரிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை விட்டு பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் அமைச்சர் வேலுமணி ‘அண்ணன் தம்பி’ எனக் கூறியதை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுவிட்டன. சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. சசிகலாவும், தினகரனும் ‘ஒன்றிணைவோம் வா’ என திமுகவை அழைக்கின்றனர். எங்களை அல்ல. அவர்கள் இருவருக்கும் அதிமுகதான் பொது எதிரி. எங்களுக்கு பொது எதிரி திமுக. திமுகவின் B டீமாக டிடிவி - சசிகலா செயல்படுகிறார்கள்’ என விளக்கம் அளித்தார்.

சசிகலா பெங்களூரிலிருந்து தமிழகம் திரும்பியதை நேரடி ஒளிபரப்பாக சன் தொலைக்காட்சி செய்தி சேனல் வெளியிட்டது. எனவே, சசிகலாவை புரமோட் செய்வதன் மூலம் திமுகவிற்கு சன் டிவி உதவுகிறதா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பர் என்பது போல், திமுகவும், சசிகலாவும் மறைமுக பேரம் பேசி இணைந்து செயல்படுகிறார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில், சசிகலாவை பற்றி ஸ்டாலின் பேசிய போது ‘ஒருவர் கொடியுடன் புறப்புட்டு விட்டார். என்ன நடக்கிறது என பார்ப்போம்’ என பேசியிருந்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவை கைப்பற்ற சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக் திமுகவுடன் பேரம் பேசி வருவதாகவும், சமீபத்தில் ஸ்டாலினை டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாகவும் ஒரு செய்தி வெளியானது. அதோடு, கணிசமான தொகை கை மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் ரகசிய கூட்டணி அமைத்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News