×

ஆகஸ்ட் 14 விடுதலையை தள்ளிப்போடும் சசிகலா ? பின்னணியில் பல காரணங்கள்!

ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவதை விரும்பவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி விடுதலை ஆவார் என்ற தகவல் பரவி, தமிழக அரசியல் சூழலை பரபரப்பாக்கியது. ஆனால் இப்போதுள்ள நிலவரப்படி அவர் ஆகஸ்ட் மாதம் வெளியாவதை விரும்பவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால் தன்னுடைய விடுதலை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் சசிகலா, விடுதலை தொண்டர்கள் பிரம்மாண்டமாக சூழ இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். ஆனால் இப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் அவரது ஜோதிடரும் ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதம் விடுதலையானால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளாராம். இந்த இரு காரணங்களால் சசிகலா அடுத்த மாதம் விடுதலை ஆவதையே விரும்புகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News