மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்!.. ஜெயிலர் 2 படத்தை பாராட்டிய சசிக்குமார்!..

 
nama narayanan

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் ஹீரோவாக நடித்த நாடோடிகள் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர்தான் நமோ நாராயணன். அதன்பின் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்த ஜெயிலர் 2 திரைப்படத்தில் மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் நமோ நாராயணன். படத்தின் முதல் பாதி முழுவதும் நமோ நாராயணன் வருகிறார். அவரிடம் ரஜினி கார் டிரைவராக வேலை செய்வது போல காட்சிகளை நெல்சன் அமைத்திருந்தார். முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது..

இந்நிலையில், நடிகர் சசிக்குமார் ஜெயிலர் 2 படத்தை பாராட்டியிருக்கிறார். ‘சூப்பர்ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்.. ஜெயிலர் 2 படக்குழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனையை உருவாக்கட்டும்.. எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியபோது ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web