Categories: Cinema News latest news

அடையாளம் தெரியாமல் அவமானம் பட்ட சசிகுமார்..! சிபாரிசுக்கு பிரபல நடிகரை அழைத்த சம்பவம்..

சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான கதையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிரும் இயக்குனருமான சசிகுமார். இவர் முதலில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் அமோக வெற்றி இவரை மேலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.

மேலும் இவர் தொடர்ந்து படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். நாடோடிகள் படத்தின் மூலம் ஏகப்பட்ட பெண் ரசிகைகளை உருவாக்கினார். அந்த அளவுக்கு அந்த படத்தில் காதல் காட்சிகளாகட்டும் நண்பர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் அழகாக காட்டியிருப்பார்.

அவரும் இயக்குனர் சமுத்திரக்கனியும் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இதனிடையில் இவர் உடன்பிறப்பு படத்திற்கான தனது கெட்டப்பை மாற்றியிருப்பார். அந்த படத்தின் கெட்டப்போடு ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தாராம். அந்த ஓட்டலின் ஊழியர் இவரை அடையாளம் தெரியாமல் உள்ளே விடலயாம்.இவர் எவ்ளோ சொல்லியில் அந்த ஊழியர் கேட்கவில்லையாம்.

உடனே சசிகுமார் சமுத்திரக்கனிக்கு போன் பண்ணி வரவழைத்துள்ளார். அவருக்கும் சசிகுமாரை அடையாளம் தெரியலயாம். எனக்கே தெரியல பின் அவருக்கு எப்படி தெரியும் என சமுத்திரக்கனி சொல்லி தான் அந்த ஊழியர் சசிகுமாரை உள்ளே அனுமதித்தாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini