Categories: Cinema News latest news

எனக்குனு இருந்த ஒன்னையும் கெடுத்திட்டீங்க…! இழந்ததை எண்ணி வருத்தப்படும் நடிகர் சசிகுமார்…!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.

படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நாடோடிகள் என்ற படத்தை இயக்கி அதிலும் ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் செம ஹிட் ஆனது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது.

நீண்ட நாள்களுக்கு பிறகு பேட்ட என்ற படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்தார். இந்த நிலையில் அவரை ஒரு பேட்டியில் சந்தித்த போது அவரின் சிரிப்பை பற்றி கேட்டனர். அதற்கு சசிகுமார் அது நாடோடிகள் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் அப்படி சிரித்திருப்பேன். அதுவும் அந்த சிரிப்பு என்னுடையதே இல்லை.

எனக்குனு இருந்த அந்த ஒரு அடையாளமாகிய சிரிப்பை ட்விட்டர், ஃபேஸ்புக்-னு சமூக வலைதளங்களில் போட்டு சிரிக்கவிட பண்ணிட்டீங்க எனவும் அந்த சிரிப்பை மறக்குற அளவிற்கு பண்ணிட்டீங்கனு மிகவும் ஆதங்கமாக கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini