சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?
2022-ஆம் ஆண்டு 'வதந்தி' என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியானது. இதில் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா தான் நடித்திருந்தார். இதை இயக்கியது 'கொலைகாரன்' படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் தான்.
இப்போது இவர் இயக்கத்திலேயே இதன் சீசன் 2 ரெடியாகி விட்டது. இதில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் சசிகுமார் நடித்திருக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் யஷ்வந்த், அபர்ணா தாஸ், அனகா, விவேக் பிரசன்னா, அர்ஜுன் நந்தகுமார், ரேவதி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
The rumours resurface. They always do.
— Wallwatcher Films (@wallwatcherfilm) July 26, 2026
Fasten your seatbelt for @SasikumarDir who leads the chase in Season 2 of the super hit series #Vadhandhi.@PushkarGayatri @andrewxvasanth @AnaghaOfficial @aparnaDasss @actorvivekpra @YashwanthOffl @RevathySharma2 @im_gowthamoffl @guha248 pic.twitter.com/k6Iosre1Xl
இதை 'Wallwatcher பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை (ஜூலை 27) மாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
