சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
Vadhandhi 2

'வதந்தி: The Fable of Velonie' வெப் சீரிஸ் 2022-ல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

இதன் சீசன் 2 'வதந்தி: The Mystery of Mani'-யில் ஹீரோவாக இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் தான் இதையும் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தங்களது 'Wallwatcher பிலிம்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்கள். இதில் சசிகுமாருடன் இணைந்து அபர்ணா தாஸ், அனகா, யஷ்வந்த், விவேக் பிரசன்னா நடித்துள்ளார்கள்.

தற்போது, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இவ்வெப் சீரிஸை வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரபல OTT தளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web