×

வீடு தேடி வந்து கதை சொன்ன சசிகுமார்… வேண்டாம் என சொல்லிவிட்டு இப்போ வரை வருத்தப்படும் நடிகை!

நடிகை காதல் சந்தியா தனக்கு சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

நடிகை காதல் சந்தியா தனக்கு சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் காதல் சந்தியா. ஆனால் ஒரு காலகட்டத்தில் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க தவறியதால் அவரின் சினிமா கேரியர் சீக்கிரமாகவே முடிந்தது. அதன் பின் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் இழந்தது குறித்து இப்போது வருத்தப்படும் விதமாக பேசியுள்ளார். இதுகுறித்து ‘இயக்குனர் சசிகுமார் என் வீடு தேடி வந்து கதை சொன்னார். எனக்கு பிடித்திருந்தாலும் நான் தயங்கினேன். அதற்காக அவர் என் மேல் கோபமாக இருப்பார். உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சார்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News