Connect with us
sathi

Cinema News

சதிலீலாவதி படம் முதலில் இப்படித்தான் எடுக்க நினைத்தோம்… ஆனால்…சீக்ரெட் பகிரும் பிரபலம்…

பாலு மகேந்திரா இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான படம் ‘சதிலீலாவதி’. கமல் திரைக்கதை எழுத வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் கமல், ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

sathi

sathi

இப்படத்தில் கமல் கோவை மொழிவழக்கு பேசுவார் என்று முடிவு செய்த உடனே, அவரே நாயகியை முடிவு செய்துவிட்டாராம். கோவை சரளாவிற்கு இப்படம் மிகப்பெரிய ஏற்றமாக அமைந்தது.

முதலில் ‘சதிலீலாவதி’ படத்தை ஹியூமர் ஜானர்ல இல்லாம, சீரியஸா எடுக்கலாம்னுதான் பிளான் பண்ணி இருக்கிறார்கள். அதில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோல் செய்வதாக இருந்ததாம். கடலோர கவிதைகள் ராஜா தான் நெகட்டிவ் ரோலில் நடிக்கவிருந்தார்.  ஆனால், பின்னர் கதையில் மாற்றம் செய்து ‘இதை சீரியஸான படமா இல்லாம, காமெடி படமா எடுக்கலாம்’னு கமல் முடிவெடுத்தாராம்.

sathi leela

sathi leela

இதனால, ‘இந்தப் படத்துல நடிக்கலைனு ராஜா கூறிவிட்டார். பாலுமகேந்திரா தான், ‘முக்கியத்துவத்தைவிட, அனுபவம் ரொம்ப முக்கியம்னு சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகே ஹீராவின் காதலராக கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ராஜா.

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தாலும் சரியான இடத்தினை சினிமாவில் பிடிக்கவில்லை. தற்போது 18 வருடமாக சரியான வாய்ப்புக்கு காத்திருப்பதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top