தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்ளில் ஒருவராக திகழ்பவர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ்.
பல்வேறு நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ்.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், மான்காரத்தே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் சதீஷ்.இதன் மூலம் சிவகார்த்திகேயன் சதிஷ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் ரிலீசான ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வந்த அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக செய்லபடும் சதீஷ் இவர் நடிப்பில் உருவான தமிழ் படம் -2 வில் இருந்து ஒரு காமெடி காட்சியை ரீல்ஸ் வீடியோவாக இளைஞர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ–>https://www.instagram.com/reel/CZ3eluhpQ1N/?utm_source=ig_web_copy_link
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…