×

சுரேஷை கலாய்த்த நடிகர்.... வச்சு செய்யும் நெட்டீசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் ஒருவழியாக போட்டியாளர்ளை அழவைத்த தாங்கள் கடந்து வந்து பாதை டாஸ்க் நேற்றுடன் முடிந்தது. 
 

16 போட்டியாளர்களில் ரேகா, சனம், ஷிவானி, கேப்ரியலா, ரம்யா பாண்டியன், ஆஜித், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 8 பேரின் கதை அவ்வளவாக கவரவில்லை என பிற போட்டியாளர்கள் முடிவு செய்து அவர்களை இந்த வீட்டில் இருக்க தகுதி அற்றவர்கள் என முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நாளுக்குநாள் குக்கிங் டீமில் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. நேற்று ரேகா-சனம் ஷெட்டி இடையில் சண்டை வெடித்தது. குக்கிங் டீமை விட்டு விலகிய சுரேஷ் சக்கவர்த்தி காய்கறிகள் வெட்டி கொடுத்ததே காரணம் என பிறகு தெரிய வந்தது. இதனால் ரேகா-சனம் இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்க அனைத்திற்கும் காரணமான சுரேஷ் சக்கரவர்த்தி சோபாவில் காலை நீட்டி படுத்துக்கொண்டு சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து, ''கணவன் -மனைவி சண்டையின் போது ஒரு கணவன் இருக்க வேண்டிய ஏகாந்த நிலை,'' என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News