×

ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவுல மஜாவா ஆட்டம் போட்ட சதிஷ்!

திரைத்துறையில்ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்ட

வை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

 

காமெடி நடிகர்களுக்கும் இதே நிலை தான்... வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ்.

மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது  சதீஷ், தொகுப்பாளினி பாவனா,  சம்யுக்தா நாயர் மூவருடன் இணைந்து விஜய் பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய வீ டியோவை விஜய் பிறந்தநாளில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News