தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ்.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், மான்காரத்தே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் சதீஷ்.இதன் மூலம் சிவகார்த்திகேயன் சதிஷ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ்.
அண்மையில் ரிலீசான ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வந்த அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அவருக்கு தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…