துல்கர் சல்மான் சார் படத்துலலாம் நடிப்பேன்னு நினைக்கவே இல்லை!.. சாத்விகா வீரவல்லி எமோஷனல்!..
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகாசம்லோ ஒக தாரா. இயக்குநர் பவன் சடினேனி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் சாத்விகா வீரவல்லி நடித்துள்ளார். மேலும், ஸ்ருதிஹாசன், ருஹானி சர்மா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சாத்விகா வீரவல்லி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இது எனது முதல் தமிழ் திரைப்படம் சென்னைக்கும் எனக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. என் அம்மா திருவான்மியூரில் இருந்தபோது அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வேன் தற்போது சென்னையிலேயே வசித்து வருகிறேன் என்று கூறினார். ஒருநாள் என்னையும் மக்கள் அடையாளம் காண வாய்ப்பு கிடைக்குமா என நினைத்திருந்தேன் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
மேலும், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதுடன், அடுத்த இரண்டு படங்களிலும் நடிக்க வாய்ப்பளித்திருப்பதாக நன்றி கூறினார். துல்கர் சல்மான் போன்ற திறமையான நடிகருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் என்றும், ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் பாராட்டினார்.
நடிகர் சின்னி ஜெயந்த் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கலகலப்பாக இருப்பார் , தனக்குத் தமிழ் பேசுவதில் தடுமாற்றம் ஏற்பட்டபோதெல்லாம் உதவியாக இருந்ததார். மேலும், அனைவரின் உழைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தை வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் சாத்விகா வீரவல்லி தெரிவித்துள்ளார்.
