சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகரா?.... ரசிகர்கள் அதிர்ச்சி...
Tue, 29 Dec 2020

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.
தற்போது சூது கவ்வும் பாகம் 2 உருவாகவுள்ளது. இப்படத்தையும் சி.வி.குமார் தயாரிக்கவுள்ளார். ஆனால், இந்த முறை விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் சத்தியராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை யங் மங் சங் இயக்குனர் அர்ஜூன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.