ஜெயலலிதாவை ஆண்டி என அழைத்திருந்தால் கொத்து பரோட்டாதான்! விஜய்யை விமர்சித்த சத்யராஜ்
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இச்சூழலில், குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
சினிமாவின் உச்ச இடத்தை விட்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சார வியூகத்தில் பிற கட்சிகளை விட, ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே அவர் முழுமையாக டார்கெட் செய்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஆரம்பக்காலத்தில் அரசியல் தளத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை 'ஸ்டாலின் அங்கிள்' என்று சற்று நகைச்சுவையாகவும், விமர்சனத் தொனியிலும் அழைத்த விஜய், தற்போது ஸ்டாலின் சார்' என கூறிவருகிறார்.
இந்த நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய நடிகர் சத்யராஜ் விஜய்யின் பழைய 'தலைவா' திரைப்பட வெளியீட்டுப் பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசியபோது,
முன்னாடி தலைவா படத்துக்குப் பிரச்சினை வந்தப்ப, விஜய் கொடநாட்டுல போய் ஜெயலலிதா அம்மா கிட்ட, அம்மா… அம்மா… ரொம்ப மன்னிச்சிடுங்க அம்மா, எப்படியாவது என் படத்தை ரிலீஸ் பண்ணுங்க அம்மா அப்படின்னு பவ்யமா, மரியாதையா பேசுவார்னு பார்த்தா… இப்போ ஸ்டாலினை 'அங்கிள்'-னு சொல்லிட்டாரு. அவர் இப்படி பேச மாட்டாரேனு பார்த்தேன். இங்க பேசின மாதிரி அங்கப் போய் ஜெயலலிதா ஆண்டி என்று சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும்? ரோட்டோரத்தில் போடுற மாதிரி கொத்து பரோட்டா போட்டு இருப்பாங்க! என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சத்யராஜின் இந்தப் பேச்சு தற்போது இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
