என்னம்மா கண்ணு,சார்லி சாப்ளின் போன்ற படங்களை எடுத்தவர் இயக்குனர் சக்தி சிதம்பரம். இவர் முதலில் எடுத்த இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியதால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது எனவும் திரையுலகை சார்ந்த சிலபேர் இவரை ஒதுக்குவதாகவும்
அறிந்த சக்தி சிதம்பரம் சொந்த ஊருக்கே சென்று பொழப்ப பாக்கலாம் என நினைத்திருந்த நிலையில் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு இவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்டுள்ளது.
ஒரு தயாரிப்பாளர் சத்யராஜ், பிரபு இவர்களுக்கு செட் ஆகுற மாறி ஒரு கதையை சொல் என கேட்க இவரிடம் இருந்ததோ அஜித்திற்காக எழுதிய மன்மதன் கதையாம். அந்த கதையை சொல்லியிருக்கிறார் சக்தி சிதம்பரம்.
அது பிடித்துப்போக அந்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க ஜோடியாக தேவையாணியை கமிட் செய்து வைகைப்புயல் வடிவேல் இரட்டை வேடங்களில் அசத்திய என்னம்மா கண்ணு திரைப்படம் தான். இதை தான் அஜித்திற்காக மன்மதன் என்ற பெயரில் எழுதி வைத்திருந்தாராம் சக்திசிதம்பரம். ஆனால் நம்ம தல மன்மதன் என்ற பெயரை ஒத்துக் கொண்டிருப்பாரானுதான் சந்தேகம்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…