தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தகிடு தகிடு என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். வில்லனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வால்டர் வெற்றிவேல் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் ஒரு நடிகனாக முன்வந்தார்.
அமைதிப்படை, சின்னப்பதாஸ், சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற பல படங்கள் அவரது கெரியரில் முக்கிய இடம் பிடித்தன. சிவாஜிக்கு பிறகு எந்த கதாபாத்திரத்திற்கும் செட் ஆக கூடிய நடிகராக சத்யராஜ் திகழ்கிறார். இன்று வரை தன் நடிப்பை காட்டி மக்களை ரசிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
பழகுவதற்கு இனிமையானவராக சாதாரண மனிதராக திகழும் சத்யராஜ் ஒரு சமயம் சின்னப்பதாஸ் படத்திற்காக
பட சூட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருக்கின்றனர். ஹீரோயினாக நடிகை ராதா நடிக்க ராதாவுக்கு அங்கு ஒரு ஃபை ஸ்டார் ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர் படக்குழு. அதே நேரத்தில் அந்த படத்தின் ஹீரோவான சத்யராஜுக்கு அதே ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்கள் , இதர டெக்னீஷியன்கள் எல்லாரும் அங்கு இருந்த ஒரு காட்டேஜில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனராம். படப்பிடிப்புக்கு வந்த சத்யராஜ் முடிந்ததும் அவரை தனியாக நீங்கள் போய் வாருங்கள் என படக்குழு தரப்பு கூற அவர் நீங்களும் என்னுடன் தானே வருவீர்கள் என கேட்க தனியாக காட்டேஜில் தங்க இருக்கிறோம் என கூறினார்களாம் .உடனே சத்யராஜ் நானும் உங்களுடனே வந்து தங்குகிறேன். இங்கு தனியாக நான் எப்படி இருப்பது என்று காட்டேஜில் தங்கினாராம் சத்யராஜ்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…