டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘ எஸ்கே 20’. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே சத்யராஜ் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தனர்.
அந்த படத்திற்கு பிறகு இருவரும் இணையும் இரண்டாவது படம் பிரின்ஸ். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் படக்குழு டைட்டிலுடன் வெளியிட்டது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர்.
படம் தாமதமாவதற்கு சத்யராஜ் தான் காரணம் என பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அவர் அப்படி கூறும் வீடியோ வைரலாகி வருகின்றது. ஆனால் அதை நகைச்சுவையாக சித்தரித்து ரிலீஸ் தேதியை படக்குழு இன்று காலை அறிவித்தனர். தீபாவளி அன்று படம் திரைக்கு வெளியாக இருக்கிறது.
இதோ அந்த வீடியோ: https://www.youtube.com/watch?v=GoA-0tHI_4k
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…