Categories: Cinema News latest news throwback stories

சத்தியராஜுக்கு வந்த சிக்கல்.. முதல் ஆளா போய் நின்ன விஜயகாந்த்.. கேப்டன் மனசு யாருக்கு வரும்!..

திரையுலகில் எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்யும் நடிகர் ஒருவர் இருந்தார் எனில் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. அதனால்தான் திரையுலகில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அவரை பிடிக்கும். அதேபோல், சினிமாவில் பலரும் வாய்ப்பு கொடுத்ததோடு, பலரையும் தூக்கிவிட்டவர்.

இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தின் சில கோடி கடனையும் அடைத்தார். தற்போது பல நடிகர்கள் இவரை பற்றி பேசும் போது விஜயகாந்த் அவர்களுக்கு எந்த வகையில் உதவினார் என்பதை தெரிவித்து வருகின்றனர்.

sathyaraj

இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ் ‘நான் வள்ளல் எனும் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்த படம் முடிந்து தயாரான போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையால் படத்தை வெளியிட முடியவில்லை. ஒரு நாள் காலை 6 மணிக்கு எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. விஜயகாந்த் பேசுவதாக சொன்னார்கள்.

காலை 6 மணிக்கே விஜயகாந்த் ஏன் கூப்பிடுகிறார் என யோசித்தபடியே போனை எடுத்து பேசினேன். எதிர்முனையில் பேசிய விஜயகாந்த் ‘வள்ளல் படத்தில் என்ன பிரச்சனை.. வாங்க உடனே லேபுக்கு போவோம். நான் கிளம்பி உங்க வீட்டுக்கு வரேன்’ என்று சொன்னார். ‘அதை எப்படியோ நான் சமாளித்து விடுவேன் நீங்கள் வரவேண்டாம் எனக்கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கே நான் போராட வேண்டியிருந்தது. உண்மையில் வள்ளல் என்கிற பெயர் விஜயகாந்துக்குதான் பொருந்தும்’ என சத்தியராஜ் பேசினார்.

sathyaraj

அதேபோல், பல வருடங்களுக்கு முன் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சத்தியராஜ் இருந்த போது ‘எனக்கு வாய்ப்புகள் ஒன்றுமில்லை. நான் இயக்குனராக விரும்புகிறேன். நீங்கள் கால்ஷீட் கொடுங்கள்’ என சத்தியராஜ் விஜயகாந்திடம் கேட்க உடனே சம்மதம் சொன்னவர் விஜயகாந்த்.

இந்த நன்றி கடன்களுக்காகத்தான் சமீபத்தில் சத்தியராஜ் விஜயகாந்தின் வீட்டிற்கே நேரில் சென்று அவரை நலம் விசாரித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “விக்னேஷ் சிவனுக்கும் த்ரிஷாவுக்கும் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு”… அந்த படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமாம்!!

Published by
சிவா