Categories: Cinema News latest news

நான் ஒரு 25 பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சிருக்கேன்.! வயசானாலும் உங்க வாய் குறையலயே.!

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து பிரமாண்ட திரைப்படங்களாக கொடுத்து வருகிறார். கடைசியாக வெளியான சாஹோ திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் இந்த முறை அப்படி ஆக கூடாது என முயற்சி செய்து காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.

 

பிரமாண்ட காதல் கதையம்சம் உள்ள திரைப்படமாக ராதே ஷியாம் தயாராகியுள்ளது. படத்தின் பிரமாண்டம் ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ட்ரைலரும் ரசிகர்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 11 ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்பட ப்ரோமோஷன் விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் பேசிய சத்யராஜ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும். பிரபாஸை நான் டார்லிங் என்றுதான் அழைப்பேன். பெரியார் படத்தில் நான் வாழ்ந்தேன். இந்த படத்தில் நடித்துள்ளேன். என கூறினார்.

இதையும் படியுங்களேன் – மனைவியை பார்த்து அப்படியே காப்பி அடிக்கும் சூர்யா.! அந்த செலவு அவருக்கே மிச்சம்.!

அதாவது, நிஜ வாழ்வில் எனக்கு தெரிந்ததை, எனக்கு பிடித்த கேரக்டரில் நடித்தால் அதில் நான் வாழ்ந்தேன் என்றே கூறுவேன். இதில், நான் நடித்துள்ளேன். இந்த படத்தில் சத்யராஜிற்கு ஒரு சாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும், நான் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளேன். அப்போது போலீசுக்கு எதிராக வசனம் பேச வேண்டும். போலீசாக நடித்தால் எதிரிக்கு எதிராக வசனம் பேசவேண்டும். அதே போல 100 படம் நடித்துள்ளேன். அதில் 20 மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

வழக்கம் போல, தனது கலகலப்பான பேச்சால், அரங்கை கொஞ்ச நேரம் சிரிக்க வைத்து சென்றுவிட்டார். அதன் பிறகு பிரபாஸ், பூஜா ஹெக்டே என பலர் பேசினர்.

Manikandan
Published by
Manikandan