Categories: Cinema News latest news throwback stories

சாவித்திரி வீட்டு திருமணம்… பணம் இல்லாத நேரத்தில் உதவி கேட்டு வந்த நபர்… ஆனால் வெளிபட்டதோ பெருந்தன்மை…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாகவும் நடிகையர் திலகமாகவும் திகழ்ந்த சாவித்திரி, அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எப்படிப்பட்ட நிலைக்கு சென்றார் என்பதை நாம் பலரும் அறிவோம்.

தனது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளி கொடுப்பவர் சாவித்திரி. இந்த நிலையில் சாவித்திரியிடம் பணமே இல்லாத சமயத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என நினைத்தார். இப்படி சூழல் இருக்க, அந்த வேளையிலும்  ஒருவர் உதவி கேட்டு வந்து நின்றார். அப்போது சாவித்திரி அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தார் என பார்க்கலாம்.

Savitri

சாவித்திரிக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டிருந்தபோது அவளது மகளான விஜய சாமுண்டீஸ்வரிக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆதலால் சாவித்திரிக்கு பண உதவி தேவைப்பட்டது. அப்போது ஒரு நபர் சாவித்திரியிடம் உதவி கேட்க வந்தார்.

சாவித்திரி அவரிடம் “நானே எனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் இருக்கிறேன். இப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கு எப்படி உதவ முடியும்” என கூறி அவரை அனுப்பிவிட்டார்.

சில நாட்களுக்குப் பின் ஒரு தயாரிப்பாளர், சாவித்திரியை ஒரு புதிய திரைப்படத்திற்கு புக் செய்ய அவரிடம் முன்பணம் கொடுத்தார் . அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சாவித்திரி, சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் உதவி கேட்க வந்த நபரை அழைத்து அந்த முன் பணத்தை அவரிடம் கொடுத்தார்.

Savitri

அப்போது அவர் “உங்களது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லை என சொன்னீர்களே. இப்போது எனக்கு இந்த பணத்தை கொடுத்துவீட்டீர்கள் என்றால் திருமணத்திற்கு என்ன செய்வீர்கள்?” என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சாவித்திரி “இந்த பணத்துடன் நான் வீட்டிற்குச் சென்றால் இதனை வைத்து என் மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என தோன்றிவிடும். ஆதலால்தான் இப்போதே உன்னிடம் கொடுத்துவிட முடிவு செய்தேன். எனது மகளின் திருமணத்தை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்” என கூறி அந்த பணத்தை அவரிடம் கொடுத்தார்.

தனக்குப்போகத்தான் தானமும் தர்மமும் என்று ஒரு பழமொழியே இருக்கிறது. ஆனால் சாவித்திரி பிறருக்கு உதவி செய்வதை தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே வைத்துக்கொண்டவர் என இதில் இருந்து தெரிகிறது.

Published by
Arun Prasad