×

அப்பா வயது நபருடன் டூயட் ஆடும் ஆர்யா மனைவி!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் யுவரத்னா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சயீஷா. இந்நிலையில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா. 

 

பிபி3 அல்லது என்பிகே106 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் டீஸர் பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

பாலகிருஷ்ணா படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அல்லது அமலா பால் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சயீஷா தான் ஹீரோயின் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிபி3 படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

பிபி3 படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் துவங்கியது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

பிபி3 பாலகிருஷ்ணா, இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு கூட்டணியின் மூன்றாவது படமாகும். முன்னதாக அவர்கள் கூட்டணியில் வெளியான சிம்பா மற்றும் லெஜண்ட் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

பிபி3 படத்தில் சயீஷா நடிப்பதை பார்த்த சினிமா ரசிகர்களோ, அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியா, இது நியாயமே இல்லை. 60 வயது பாலகிருஷ்ணாவுக்கு 23 வயது சயீஷாவை ஜோடியாக போட எப்படித் தான் மனசு வந்ததோ. சயீஷாவின் அப்பாவை விட பெரியவர் பாலகிருஷ்ணா என்கிறார்கள்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News