×

இத்தனை ஆண்டுகள் பாடியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சொத்து மதிப்பு இவ்வளவுதான்

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழி அனைத்திலும் பாடல்களால் ரசிககளை கட்டிப்போட்டவர்.
 

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழி அனைத்திலும் பாடல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

பொதுமக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இவரின் மறைவு திரையுலகினருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கூடிய கூட்டமே இதற்கு உதாரணம்.

எஸ்.பி.பி இதுவரை சுமார் 42000 பாடல்கள் பாடியுள்ளார். மிகவும் குறைந்த சம்பளமாக இருந்தாலும் மனதார ஏற்றுகொள்வாராம்.சிலகாலம் கடனிலும் இருந்த அவர் கடந்த 2018ம் ஆண்டில்தான் அதிலிருந்து மீண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது நாள் வரை உழைத்ததில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களே அவர் சேர்த்து வைத்த்ததாக கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் திரையுலகில் இருப்பவர்களில் சொத்து மதிப்புகளில் இது மிகவும் குறைவே. அதுவும் 50 ஆண்டுகள் திரையுலகில் கொடிகட்டி பறந்த எஸ்.பி.பி. சேர்த்த சொத்து மிகவும் குறைவே. காரணம் ஒரு படத்திற்கே 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் ஆட்களும் திரையுலகில் உண்டு. 

From around the web

Trending Videos

Tamilnadu News