×

எஸ்.பி.பி. உடல்நிலை - எஸ்.பி.சரண் முக்கிய அப்டேட்

பாடகர் பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அவரின் மகன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக செய்திகள் வெளியானது.

கடைசியாக தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, பிரார்த்தனையை தொடருங்கள் என கோரிக்கை வைத்து அவரின் மகன் எஸ்.பி.. சரண் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், எஸ்.பி.சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.  விரைவில் குணம் அடைவார்’ என சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News