×

விரைவில் வீடு திரும்புவார் எஸ்பிபி - மகன் நம்பிக்கை!

எஸ்பிபி உடல் நலம் குறித்து சமீபத்திய தகவல்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினி மா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் தற்ப்போது மகன் எஸ்பிபி சரண் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எஸ்பிபி தற்போது பிசியோதெரபி சிகிச்சை செய்யப்பட்டு  வருவதால் அவர் விரைவில் குணமடைவார் என்று கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News