×

பயந்து யோசிக்கும் மெகா பட்ஜெட் படங்கள்… தைரியமாக களத்தில் இறங்கும் இரண்டாம் குத்து  தயாரிப்பாளர்!

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஒருவழியாக 6 மாத காலத்த்துக்கு பிறகு திரையரங்குகளை திறக்க சொல்லி மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநில அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் எந்த தயாரிப்பாளரும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய யோசிக்கும் நிலையில் ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் துணிச்சலாக இறங்கியுள்ளார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகமான முரட்டுக்குத்து திரைப்படத்தை அக்டோபர் 23 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தயாராகியுள்ளாராம்.

அதற்கு முக்கியக் காரணம் படத்தின் கண்டெண்ட்தானாம். இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்க்க கண்டிப்பாக கூட்டம் வரும் என நினைக்கிறார்களாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News