300 கோடிக்கு சான்ஸே இல்லை?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் தான் சூர்யாவோட சீன் படத்துக்கும்!..
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு தொடர்ந்து வெளியான படங்கள் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது வெளியான சீன் படமும் உலகம் முழுவதும் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில் ஆக்ஷன், நகைச்சுவை, கிரைம் என அனைத்தும் கலந்த கதையாக உருவாகியுள்ளது.

இதற்கிடையே சூர்யா அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கயாடு லோஹர்,யோகி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சீன் திரைப்படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தொடுமா என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள ஒரே கேள்வியாக உள்ளது.
இந்த வாரம் தனுஷின் ஓம், விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி, கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், சீன் படத்தின் வசூல் மேலும், அடிவாங்கும் என்கின்றனர்.
