சூர்யாவுக்கு 3வது சூப்பர் ஹிட்!.. வசூலில் கலக்கும் சீன்.. 11 நாள் கலெக்சன் அப்டேட்...

 
scene movie

கடந்த சில வருடங்களாகவே சூர்யாவுக்கு வெற்றி படங்கள் அமையவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கங்குவா திரைப்படம் அதிகமான ட்ரோலில் சிக்கியது. அதன்பின் வெளியான மெட்ரோ திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

அதேநேரம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது..

அதேபோல் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சீன் திரைப்படம் இதுவரை உலகமெங்கும் ரூ.247 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.161 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

Murugan ..
Murugan ..

5160 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web