Scene box office collection day 1: மாஸ் ஓப்பனிங்!.. முந்தைய படத்தின் சாதனையை முறியடித்த சீன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள திரைப்படம் சீன் . மலையாளத்தில் ரோமாஞ்சம் , ஆவேசம் போன்ற படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்லென், நஸ்ரியா நசீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரைம், திரில்லர், டார்க் காமெடி அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (நவம்பர் 6ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியான சீன் திரைப்படம் முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பாசிடிவான விமர்சனக்க்ளை பெற்று வருகிறது. இது சூர்யாவுக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றி என பல்ரும் சமூக வலைதளங்களில் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில் சீன் படம் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, சீன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.34.25 கோடி மொத்த வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.19.15 கோடி நிகர வசூலும், ரூ.22.25 கோடி மொத்த வசூலும் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொத்தம் 6,167 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் சுமார் 14.31 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் பதிப்பு முதல் நாளில் ரூ.16.15 கோடி நிகர வசூல் செய்துள்ளது. தெலுங்கு பதிப்பு ரூ.3 கோடி வசூலித்துள்ளது. மாநில வாரியாகப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ரூ.10.75 கோடியும், கேரளாவில் ரூ.5.75 கோடியும் மொத்த வசூல் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.3.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.2 கோடியும் வசூலித்துள்ளது.
சூர்யாவின் முந்தைய திரைப்படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் நாளில் உலகளவில் ரூ.31.74 கோடி மொத்த வசூல் செய்திருந்தது. அந்தப் படத்துடன் ஒப்பிடும்போது சீன் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.2.51 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. இதன் மூலம் சூர்யாவின் முந்தைய படத்தைவிட சீன் திரைப்படம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
