×

ஸ்கூல் பாப்பா கீர்த்தி சுரேஷ் - இணையத்தை அசத்தும் கியூட் போட்டோ!

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

 

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். தற்ப்போது கீர்த்தியின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News