Connect with us
Vijay

Cinema News

உங்களை நான் பார்த்தே ஆகனும்- விஜய் வீட்டின் முன் கதறி அழுத பள்ளி மாணவி… தளபதி எடுக்கப்போகும் முடிவு என்ன?

நடிகர் விஜய் தொடக்கத்தில் ரொமாண்ட்டிக் நடிகராகவே உலா வந்தார். ஆனால் “திருமலை” திரைப்படத்தில் இருந்து விஜய் ஆக்சன் ஹீரோவாக உருமாறினார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் பல கோடி ரசிகர்கள் உண்டு. தமிழ் சினிமா ரசிகர்களில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராக விஜய் இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் நடிகராக இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று விஜய்யின் பனையூர் வீட்டிற்கு வெளியே ஒரு பள்ளி மாணவி வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தார். அந்த மாணவி விஜய்யிடம் பேசுவது போலவே அந்த சிசிடிவியை பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“உங்க வீடு வரைக்கும் வந்துட்டேன். உங்களை ஒருவாட்டிக்கூட பார்க்கவில்லை. நேரில் பார்த்துதான் பேசமுடியவில்லை, உங்கள் கேமராவை பார்த்தாவது பேசுறேன். நான் உங்களை பார்க்க வேண்டும். என்னை கூப்பிடுங்கள். என்னை கூப்பிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். எனக்கு அழுகையாக வருகிறது. நான் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறேன். என்னை நிச்சயமாக அவர் கூப்பிடுவார். எனக்கு தளபதி மீது நம்பிக்கை இருக்கிறது” என்று கதறி அழுகத்தொடங்கினார்.

மேலும் விஜய்யின் வீட்டின் கேட்டை கட்டி பிடித்தார். விஜய்யின் காலில் விழுந்து கெஞ்சுவது போல் அவர் வீட்டிற்கு வெளியே தரையை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஒரு சிறு வயது குழந்தை தளபதி விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறுவது போல் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து ஒரு நாள் விஜய் அந்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசினார். இதனை தொடர்ந்துதான் தற்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவியும் விஜய்யை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இவ்வாறு அவரது வீட்டிற்கு வெளியே கெஞ்சிக்கொண்டிருக்கும் பள்ளி மாணவியை விஜய் நேரில் அழைத்துப் பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: முதல் பாட்டு எழுதும்போதே ரஹ்மான் விரட்டிவிட்டிடுவார்?…. பொன்னியின் செல்வன் பாடலாசிரியரை கலாய்த்த வசனகர்த்தா…

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top