×

பிக்பாஸில் சீசன் 4 ; கலந்து கொள்வது யார் யார்?.. புதிய லிஸ்ட் இதோ....

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க வரவேற்பை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நாசர் மகன் அபிஹாசன் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கமலஹாசன் மகள் அகஷரா ஹாசனுக்கு ஜோடியாக கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். 

ஏற்கனவே ஷாலு ஷம்மு, நடிகை கிரண் உள்ளிட்ட சிலர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில், கேப்ரியளா, ரியா ராஜ், அனு மோகன்,ஷிவானி, ஜித்தன் ரமேஷ்,ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 4 வருகிற அக்டோபர் - 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறதாம். அதில்  போட்டியாளர்களை அறிமுகப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News