கெனிஷா மியூசிக்கில் அடுத்த பாட்டு!.. ரவி மோகன் இயக்கும் யோகி பாபு படம் தப்பிக்குமா?..
யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் An Ordinary Man. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் நடிகர் ரவி மோகன் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், படத்தின் அடுத்த பாடலாக 'லார்டா லபுக்கா' என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
Hello Hello Hello! 🎤 இந்த அமுத கான நிகழ்ச்சியின் அடுத்த பாடலாக… #LORDALABAKA from TOMORROW! ✨ @iam_RaviMohan @iYogiBabu @keneeshaa #Siddharth #MannarMuthu #AnOrdinaryMan #aom #Netflix https://t.co/DTCyAzWfG6
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) November 11, 2026
ஏற்கெனவே இப்படத்தின் முதல் பாடலான Higher பாடல் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ரவி மோகன் மற்றும் யங் ராஜா இணைந்து எழுதிய அந்தப் பாடலை ரஞ்சித் பாடியிருந்தார். தற்போது வெளியாகவுள்ள அடுத்த பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகமாகதான் உள்ளது.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் எனப் புதிய முயற்சி செய்யும் ரவி மோகனின் இப்படத்தின் பாடல்களே பெரிதும் ரசிகர்களை கவராத நிலையில் படம் எந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்று கேள்வி எழுந்து வருகிறது.
