
Cinema News
அவங்க சொன்னா ஓகே!.. எனது வெற்றிக்கு காரணமே அவர்கள்தான்!.. நாகேஷ் சொன்ன சீக்ரெட்!..
Published on
By
நாகேஷ் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் . நகைச்சுவை நடிப்பில் இத்தனை பரிமாணங்களை காட்ட முடியும் என நிரூபித்தவர் இவர். கருப்பு – வெள்ளை படங்கள் துவங்கி, கலர் படங்கள் வரை தனது நடிப்பினால் கலக்கி எடுத்தவர்.
எம்ஜிஆர் – சிவாஜி உச்சபட்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களுடன் இணைந்து நடித்தவர்.
அவர்களுடன் நாகேஷ் கை கோர்த்த படங்களில் கதாநாயகிகளுக்கு இணையான முக்கியத்துவம் இவருக்கு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்”திரைப்படம் மிகப்பெரிய பெயரினை பெற்று கொடுத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “திருவிளையாடல்”படத்தில் நடித்திருந்தார் ‘தருமி’ என்கின்ற கேரக்டரை ஏற்று நடித்தார். இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தை இவ்வளவு கச்சிதமாக செய்திருக்க முடியாது என நிரூபித்தவர்.
இதையும் படிங்க: காதலுக்காக மதம் மாறிய நாகேஷ்!… கல்யாணத்துக்கு அப்புறம் அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
“சர்வர் சுந்தரம்” என்ற படத்தில் நடித்திருந்த இவர் இவரின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவன் தனது திறமையால் முன்னேறி, சில காரணங்களால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் கதையைக் கொண்டு அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து.
ரஜினிகாந்துடன் இவர் நடித்த “தில்லு முல்லு” படம் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. ரஜினியுடன் இவர் நடித்த “அதிசய பிறவி”, “தளபதி” போன்ற படங்களும் இவருக்கு சிறப்பானவைகளாகவே அமைந்தது.
கமலஹாசன் உடன் இவர் இணைந்து நடித்த படங்கள் எண்ணிக்கையில் அதிகம், கமல் படம் என்றால் அதில் நிச்சயமாக நாகேஷ் இடம் பெற்று இருப்பார் என்பதனை பட அறிவிப்பு வந்த உடனே நாகேஷும் நடிக்கலாம் என நினைக்கும் அளவில் இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். “மகளிர் மட்டும்” படத்தில் பிணமாக வரும் இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. “அவ்வை சண்முகி”, “நம்மவர்” படங்களில் கமலுடன் நடித்திருந்தார்.
இவர்களுக்கு அடுத்த தலைமுறை உச்சபட்சங்கள் ஆன ‘அஜித்’, ‘விஜய்’ உடனும் இவர் நடித்திருக்கிறார். அஜித் குமாருடன் “பூவெல்லாம் உன் வாசம்” என்கின்ற திரைப்படத்திலும்,
விஜயுடன் “பூவே உனக்காக” படத்திலும் நடித்திருக்கிறார்.
nagesh2
இப்படி உச்சத்தில் இருந்த மூன்று தலைமுறை நடிகர்களை பார்த்த நாகேஷ், அவரது வெற்றிக்கு பின்னால் இருந்தவர்களை பற்றி குறிப்பிட்டது ஆச்சரியத்தை தந்துள்ளது. ஒரு காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் அங்கே இருக்கும் “லைட் பாய்”களிடம் கருத்து கேட்பாராம். காட்சி படமாக்கப்பட்டதுடன், அவர்களை நோக்கி நாகேஷ் பார்ப்பாராம், உடல் அசைவிலே நடிப்பு பற்றிய கருத்தினை கேட்பாராம்.
அவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதை அப்படியே விட்டு விடுவாராம், செய்கைகள் மூலம் சரியில்லை என குறிப்பிட்டார்கள் என்றால் அந்த காட்சியை மீண்டும் எடுக்க இயக்குனரிடம் கோரிக்கை வைப்பாராம்.எல்லா தரப்பு நடிகர்களையும், நடிகைகளையும் பார்த்து வந்தவர்கள் அவர்கள், அவர்களிடம் இருக்கக்கூடிய அந்த அனுபவமே தம்மை இவ்வளவு பெரிய இடத்திற்கு அழைத்துச் சென்றதாக சொல்லி இருந்தார்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...