சீமான் கண்ட்ரோலில் சிவகார்த்திகேயன்!. எல்லாம் ஒரு கணக்கு!.. பிரபலம் பேட்டி...
நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனித்துப் போட்டுவிட்டு தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் இரண்டு பேருமே சமீபத்தில் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
முக்கியமாக அவர்கள் இருவர்களின் ரசிகர் மன்றங்களும் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு, விரைவில் மக்கள் இயக்கமாகவும் மாற்றப்படவிருக்கிறது. அதாவது விஜயின் அதே ஸ்டைல்.. எனவே, அவர்கள் இருவரும் அரசியல் நோக்கி பயணப்படுவதாகவே பார்க்கப்படுகிறது..
தற்போது அதுபற்றி அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் இன்னும் சில வருடங்களில் அதை நாம் பார்க்க முடியும். ஏற்கனவே தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்தார். அந்த நிகழ்ச்சி நடந்த மண்டபமே ஒரு அரசியல் மாநாடு போலவும், சட்டசபை போலவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் வலைப்பேசு பிஸ்மி ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அவர் தன்னுடன் கூட்டணி வைப்பார். எனவே, நாம் முதலமைச்சராகி விடலாம் என சீமான் கணக்கு போட்டார்.. ஆனால் சீமானின் திட்டத்தை புரிந்து கொண்ட விஜய் அவரை கழட்டி விட்டார்..
சீமான் 15 வருடங்களாக கத்தியும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் சீமான் நடித்து வருவதால் கண்டிப்பாக அவர் சிவகார்த்திகேயனை மூளை சலவை செய்திருப்பார்..
சிவகார்த்திகேயனுக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதால் அவரை அரசியல் கட்சி தொடங்க வைத்து தன்னுடன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூட சீமான் நினைத்திருக்கலாம்.. சீமானின் அறிவுரையில்தான் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்திருப்பார் என நான் நம்புகிறேன். தற்போது சீமானின் கண்ட்ரோலில்தான் சிவகார்த்திகேயன் இருக்கிறார்’ என அவர் கூறியிருக்கிறார்.
