×

தி பேமிலி மேன் தொடரை சட்டரீதியாக எதிர்ப்பேன்... கடும் கோபத்தில் சீமான்...

அண்மையில் வெளியாகியுள்ள 'தி பேமிலி மேன்' இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் தடை செய்வோம்.
 
the-family-man-2-1200

மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தி பேமிலி மேன் சீரிஸ் வெளியானது. படத்தின் டிரெய்லர் வெளியான போதே, படத்தில் தமிழர்களை இழிவாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் எழுந்தன. 

இதனிடையில் அண்மையில் வெளியாகியுள்ள 'தி பேமிலி மேன்' இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன்.

அறத்தின் வடிவமாய், ஒழுக்கத்தின் உருவமாய், கண்ணியத்தின் தோற்றமாய்க் களத்தில் நின்று, இலட்சியத்தை முழுதாய் நெஞ்சிலேந்தி, நச்சுக்குண்டுகளின் கொடும் தாக்குதல்களுக்கு ஆட்பட்டப்போதும் தடம்பிறழாது தனது பாதை மாறாது, மரபுவழிப்போரையே முன்னெடுத்து, இறுதிவரை போர் மரபுகளையும், மனித மாண்புகளையும் கடைப்பிடித்துச் சமரசமற்று சண்டையிட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News