Categories: Cinema News latest news

ரஜினிக்கு கொடுக்கத் தெரிஞ்ச பாதுகாப்பை விஜய்க்கு ஏன் கொடுக்க முடியல? தம்பி வருவான் – தோள்கொடுத்த சீமான்

Seeman Firey Speech: ஒரு பக்கம் விஜயின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதன் செய்தி பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. இன்னொரு பக்கம் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதை பற்றி ஆவேசமாக பேசியுள்ளார். எப்போதுமே அவரை பேட்டி காணும் போது நிரூபர்கள் கேள்வி கேட்ட பிறகே அவர் பதிலடி கொடுப்பார். ஆனால் இன்று அவர் உட்கார்ந்ததும் ‘இரு இரு இன்றைக்கு ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டியிருக்கு’ என விஜயை பற்றி பேச்சை எடுத்தார்.

இதையும் படிங்க: வடிவேல வச்சி படமெடுத்து என் சோலியே முடிஞ்சு போச்சி!.. புலம்பி தள்ளும் இயக்குனர்…

எத்தனையோ முறை விஜய் தன் படங்களுக்காக ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியிருக்கிறார். ஆனால் இந்த முறை ஏன் அவரை அனுமதிக்க வில்லை? கேட்டால் ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அதற்கும் ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்ன செய்திருக்க வேண்டும்? ஏதாவது விழா ஏற்பாட்டில் குளறுபடிகள் இருந்திருந்தால் அதை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரஹ்மானிடம் தெரிவித்திருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதற்குத்தான் அரசு.

இதையும் படிங்க: மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க இருந்த நதியா… ஜஸ்ட்டு மிஸ்சு..! என்ன படம் தெரியுமா?

பாதுகாப்பே கொடுக்க மாட்டேன். நீ வீட்டிலேயே இருந்து கொள் என்று சொல்வதற்கா அரசு இருக்கிறது? இதே ரஜினிக்கு ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க தெரிஞ்சவங்களுக்கு ஏன் விஜய்க்கு மட்டும் கொடுக்க மறுக்கிறார்கள்? இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்படுகின்ற சதி.

எரியனும் என்று நினைத்த நெருப்பு மேல் எந்தளவுக்கு குப்பையைக் கொட்டினாலும் அணைக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இரண்டு பக்கமும் இருந்து உதைத்தாலும் அந்த பந்து மேல தான் வரும் என விஜயின் அரசியல வருகையையும் லியோ பட இசை வெளியீட்டு விழா ரத்தானதையும் பற்றி சீமான் மிக ஆவேசமாக பேசினார்.

இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. நயன்தாராவிடம் சரண்டரான ஜெயம் ரவி.. கருணை காட்டிய மூக்குத்தி அம்மன்!..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini