Connect with us
see

Cinema News

‘ஜெய்லரில்’ நடந்தது யாருக்காவது தெரியுமா? ரஜினியை பற்றி சீமான் ஆவேசம் – அட போங்கடா

Actor Rajini and Seeman: தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. பொதுவாகவே ஒருவர் தன் இலக்கை நோக்கி அடையும் போது பல வித இடையூறுகள் வருவது வழக்கம்தான்.அதிலும் சினிமாவில் மாபெரும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியை தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

அவருடைய பட்டத்திற்கே போட்டி போட்டுக் கொண்டு சில பல பிரச்சினைகள் வந்தது. அதன் பிறகு இமயமலை சென்று திரும்பும் போது யோகியின் காலில் விழுந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதையும் படிங்க: நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..

கிட்டத்தட்ட தன்னை தெய்வமாக நினைக்கும் இத்தனை கோடி ரசிகர்களை கொண்ட ரஜினி வயதில் இளையவரான யோகியின் காலில் விழுவது சரியா? என்ற பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் ரஜினி அதை பற்றி வயதில் இளையவரானாலும் இந்த மாதிரி யோகிகள் காலில் விழுவது என்னுடைய வழக்கம் என்று கூறினார்.

இதை பற்றி ஒரு பேட்டியில் சீமான் பொங்கி எழுந்து பேசியிருக்கிறார். அதாவது ரஜினி காலில் விழுவதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். தம்பி நெல்சன் சமீபத்தில் ரஜினியை வைத்து ஜெய்லர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை  கொடுத்தார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் நடந்த உச்சக்கட்ட பகல் கொள்ளை… கசிய தொடங்கும் ரகசியங்கள்!

நெல்சன் எப்படிப் பட்ட இயக்குனராக இருந்து விட்டு போகட்டும். முன்பு தோல்விப் படத்தை கொடுத்திருக்கிறார், இல்லை வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார். எதுவாக இருக்கட்டும். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்ற மரியாதைக்காக செட்டில் அவர் வரும் போதும் போகும் போதும் ரஜினி எழுந்து நின்று  மரியாதை கொடுப்பார் என ஜெய்லர் மேடையில் கூறினார்.

அதை பற்றி யாராவது பேசினீர்களா? யார் இப்படி இருப்பார்கள்? எப்பேற்பட்ட நடிகர் ரஜினி. நெல்சன் நேற்று வந்த ஒரு இயக்குனர். ஆனால் மரியாதை கொடுக்கிறார் அல்லவா? இதெல்லாம் வரும் இளம் தலை முறையினருக்கு ஒரு பாடம். கல்வெட்டில் கூட எழுதிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: ரஜினி ரொம்ப அழுதது அன்றைக்குத்தான்! நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த நண்பர்

ஆனால் காலில் விழுந்தார் ரஜினி என்பதை மட்டுமே பிடிச்சி தொங்கிட்டு இருக்கீங்க. அட போங்கடா என வழக்கமான தன் பாணியில் ஆவேசமாக பேசினார் சீமான்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top