இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேட்குதோ...சரத்குமாரை பங்கமாய் கலாய்த்த சீமான்

by Cine Reporter |
இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேட்குதோ...சரத்குமாரை பங்கமாய் கலாய்த்த சீமான்
X

விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பரமசிவன் பாத்திமா. விமலின் 34வது படமான

இதனை இசக்கி கர்வண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். புதுமுகம் சாயாதேவி நாயகியாக நடிக்கிறார்.

வெவ்வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இதனால் ஏற்படும் விபரீதங்களே இப்படத்தின் மூலக்கதை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம்ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.




இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நாதக நிறுவனர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, பொன்னியின் செல்வன் படம் வெளியானபோது சரத்குமாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரிடம் இந்த வயதில் உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேட்குதோ என நக்கலாக கூறினேன். அதனை கேட்டு சிரித்த சரத்குமார், உனக்கு பொறமைடா. உடலை நன்றாகவைத்துக் கொண்டால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று கூறினார் என சீமான் பேசினார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story