Categories: Cinema News latest news

நடிக்கத் தெரியலைன்னு தான் மனிஷாவை மாற்றினேன்!.. பாலியல் தொல்லை கொடுக்கல.. சீனு ராமசாமி பதில்!..

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் அதன் காரணமாகவே அந்த படத்தில் நடிக்காமல் மனிஷா இடம் பொருள் ஏவல் படத்தில் இருந்து விலகினார் என பிஸ்மி பகீர் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

நடிகை மனிஷா யாதவும் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் சீனு ராமசாமி தன்னை மோசமாக நடத்தினார் என்றும் இனிமேல் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: நடிச்சி போரடிச்சிடுச்சா!.. கணவருக்கே வேட்டு வைக்க இப்படியொரு ரூட்டை பிடித்த நயன்தாரா?

இந்நிலையில், தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தன் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் நோக்கில் பல கேள்விகளை மனிஷாவுக்கும் தன்னை பற்றி அவதூறு பரப்பிய பிஸ்மிக்கும் எழுப்பி உள்ளார்.

இடம் பொருள் ஏவல் படத்தில் மனிஷா யாதவ் முதல் நாளில் ஏன் ஒரு காட்சியில் நடிக்க 28 டேக்குகள் வாங்கினார் என்றும், அவருக்கு உதவ முயன்ற நடிகை வடிவுக்கரசியை திட்டினார் என்றும் விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என கேட்டதற்கு ஏன் மறுத்தார் என்றும் என் சம்பளத்தில் ஒரு லட்சத்தை நஷ்ட ஈடாக பெற்றது ஏன் என பல கேள்விகளை அடுக்கி உள்ளார்.

இதையும் படிங்க: மாட்டுனா கூட ஹீரோக்கள் திருந்த மாட்டாங்க!.. அட்ஜெஸ்ட்மென்ட் அசிங்கம்.. குட்டி பத்மினி ஓப்பன் பேட்டி!..

மேலும், நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு என அவரை கலாய்த்து, மாமனிதன் படத்திற்கு வாங்கிய விருதுகளை பிண அலங்காரம் என்றும் கடந்த ஒன்றரை வருடமாக என்னை டார்கெட் செய்து வீடியோ போடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர்களை படத்தில் இருந்து நீக்கினால் சிறந்த டைரக்டர், அதுவே பெண் நடிகைகளை நீக்கினால் பாலியல் தொல்லை கொடுத்தேன் என சொல்வதா? என விளாசி உள்ளார். இதற்கு நடிகை மனிஷா யாதவ் மற்றும் பிஸ்மி என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றனர் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Saranya M
Published by
Saranya M