மீண்டும் தம்பியின் தலையை தடவ போகும் அண்ணன்!.. அந்த படத்தை இந்த வருஷம் எடுக்கப் போறாராம்!..
Feb 6, 2024, 21:02 IST
துள்ளுவதோ இளமை படத்திற்கு கதையை எழுதி தம்பி தனுஷை ஹீரோவாக மாற்றி அப்பாவையும் கடனில் இருந்து காப்பாற்றியவர் செல்வராகவன். அடுத்து காதல் கொண்டேன் படத்தில் இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்து விட்டார். தொடர்ந்து தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கிய செல்வராகவன் பல ஆண்டுகள் ஃபார்ம் அவுட்டான நிலையில், மீண்டும் ஒரு படத்தை தனுஷை வைத்து நானே வருவேன் என இயக்கி இருந்தார். இதையும் படிங்க: விஜயகாந்த இப்படி அசிங்கப்படுத்தணுமா?!.. வீடியோவால் அதிர்ந்து போன நெட்டிசன்ஸ்!.. ஆளவந்தான் படத்தை தயாரித்து அடி வாங்கிய கலைப்புலி எஸ். தாணு அதே பாணியில் உருவான இந்த படத்தை நம்பி தயாரித்த நிலையில், நஷ்டம் அடைந்தார் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு அண்ணன் உடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை அறிவித்த நிலையில், ஆளவிடுடா சாமி என தனுஷே ஒரு படத்தை இயக்கியும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தும் வருகிறார். இதையும் படிங்க: ஐய்யய்யோ பாக்கவே கண்ணு கூசுதே!.. அழகா காட்டி வெறியேத்துறாரே மாளவிகா மோகனன்… இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு எப்படியாவது புதுப்பேட்டை 2 படத்தை இயக்கியே தீருவேன் என செல்வராகவன் தற்போது ட்வீட் ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான சரியான கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம் தான் புதுப்பேட்டை. வரிசையாக பார்ட் 2 படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் தொடர்ந்து முதல் பாகத்திற்கு பங்கம் விளைவித்து வரும் நிலையில், புதுப்பேட்டை 2 எப்படி உருவாகப் போகிறதோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. https://twitter.com/selvaraghavan/status/1754885804902818202
