×

செல்வராகவனுக்கு மீண்டும் ஆண் குழந்தை - திரையுலகினர் வாழ்த்து

 

இயக்குனர் செல்வராகவன் தனது உதவியாளர் கீதாஞ்சலியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஓம்கார் என்கிற மகனும்,லீலாவதி என்கிற மகளும் உள்ளனர்.

கீதாஞ்சலி 3வது முறையாக கர்ப்பம் தரித்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் மகன் பிறந்துள்ளான். இந்த செய்தி அவரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. செல்வராகவனுக்கும், கிதாஞ்சலிக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News