×

பீஸ்டர் படத்தில் வில்லன்!. செல்வராகவனுக்கு இத்தனை கோடி சம்பளமா?..

 
beast

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் - பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது.  

beast

அடுத்த கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது. எனவே, விரைவில் படக்குழு டெல்லி செல்லவுள்ளது. 2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறது. சர்ப்பரைஸாக இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளர். வில்லனுக்கு அறிவுரை கூறும் வேடம் எனக்கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு ‘பீஸ்ட்’ படக்குழு தரும் தீபாவளி ட்ரீட்.... என்ன தெரியுமா?...

selva

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பெரிய நடிகர் படம், பெரிய படக்கம்பெனி என்பதால் அவருக்கு இந்த சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இவ்வளவு சம்பளம் கொடுத்தால் இனிமேல் இயக்குவதை விட்டு விட்டு செல்வராகவன் நடிக்க சென்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்...

From around the web

Trending Videos

Tamilnadu News