மனைவி செய்த வேலை!.. குலுங்கி குலுங்கி அழும் செல்வராகவன்!.. வீடியோ பாருங்க!...
கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். ஸ்டன்னிங் இயக்குனர் என மணிரத்தினமே இவருக்கு பட்டம் கொடுத்தார். இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இந்த படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று இன்று வரை அவர்கள் செல்வராகவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதற்காக நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன் என சொன்னார் செல்வராகவன். ஒருபக்கம், கடந்த பல வருடங்களாகவே செல்வராகவன் நடிகனாக மாறிவிட்டார். பல திரைப்படங்களிலும் தொடர்ந்து நடுத்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்..
ஒருபக்கம் செல்லராகவன் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற்ற தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தத்துவங்களை சொல்லி வீடியோ போடுவதுண்டு. அதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. நக்கலடித்து கமெண்ட் செய்பவர்களும் உண்டு. இந்நிலையில், இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் செல்வராகவன்.
அதில் அவரின் மனைவி கீதாஞ்சலி பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ என்கிற பாடலை சோபாவில் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார். அவர் பாடுவதைக் கேட்டு செல்வராகவன் குலுங்கி குலுங்கி அழுகிறார். தனது மனைவி பாடுவது அவ்வளவு கேவலமாக இருக்கிறது என சொல்வது போல அவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
