×

நிறைய படம் இருக்கு...அப்புறம் பாப்போம்!... அண்ணனை டீலில் விட்ட தனுஷ்....

 
danush

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். தற்போது அவரின் கையில் 3க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது. அவரின் நடிப்பில் உருவான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

danush

தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2  திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அதன்பின் அப்படத்தின் தலைப்பு ‘நானே வருவேன்’ எனவும், தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு 20ம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

selva

ஆனால், கர்ணன் மற்றும் ‘The Grey Man' என்கிற ஆங்கில படத்தில் நடித்து வந்தார். அப்படங்கள் முடிந்த பின் தனுஷ் செல்வராகவன் கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது ‘மாறன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், அடுத்து ‘திருச்சிற்றம்பலம்’ என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது.

selva

எனவே, ஆகஸ்டு 20 அதாவது நாளை தொடங்கவிருந்த செல்வராகவன் திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. செல்வராகன் -  தனுஷ் இணையும் படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை. மற்றவர்களின் படத்திற்காக தனுஷ் அண்ணனை டீலில் விட்டது செல்வராகவன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News