Categories: Cinema News latest news throwback stories

தனுஷ் கன்னத்தில் பளார் விட்ட செல்வராகவன்.. இது எப்ப நடந்துச்சுன்னு தெரியுமா?…

தனுஷை சினிமாவில் அறிமுகம் செய்தது அவரின் தந்தை கஸ்தூரி ராஜாதான். துள்ளுவதோ இளமை படத்தில்தான் தனுஷை நடிக்க வைத்தார். அப்போது தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். முகம் சுளிக்கும் காட்சிகள் அப்படத்தில் இருந்ததாக ஒருபக்கம் எதிர்ப்புகள் வந்தாலும் அப்படம் வெற்றியடைந்தது. இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயர் வந்தாலும் அப்படத்தை இயக்கியது தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான். அவர்தான் தனுஷுக்கு நடிப்பு சொல்லித்தந்த குரு.

அடுத்து செல்வராகவன் தம்பி தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதும் ஒரு காட்சியில் தனுஷ் சரியாக நடிக்கவில்லை. அதிக டேக்குகள் வாங்கியுள்ளார்.

kadhal konden

அண்ணன் செல்வராகவன் ரொம்ப பொறுமையாக தனுஷுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார், ஆனால் தனுஷ் மறுபடியும் நிறைய டேக் எடுத்திருக்கிறார். இதை பார்த்த செல்வராகவன் கோபத்தில் எல்லோர் முன்னிலையிலும் தனுஷுன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாராம். உடனே தனுஷ் அழுதுகொண்டே அறைக்குள் போய்விட்டாராம்.

அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வராகவனிடம் ‘அவர் இப்பதான நடிக்க வந்துருக்கிறார்.. அவரை ஏன் அடிச்சிங்க? என கேட்டிருக்கிறார்’. மேலும் செல்வராகவனுடைய உதவியாளர்கள் தனுஷை சமாதானம் செய்ய சென்றுள்ளனர். அப்போது தனுஷ் ‘நான் படித்துகொண்டுதானே இருந்தேன்.. ஏன் என்னை கூப்பிட்டு வந்து இப்படி கஷ்டப்படுத்துறாங்க’ என கூறி வருத்தப்பட்டாராம்.

danush

ஆனால்,  அதே செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் மீண்டும் நடித்தார். இப்படி எல்லாம் சின்ன சின்ன விஷயங்களுக்கு வருத்தப்பட்ட தனுஷ் இப்பொழுது நடிப்பு, பாட்டு, இயக்கம் என்று எல்லா துறையிலும் சாதித்து வருவதை பார்க்கும் போது ரொம்ப பிரமிப்பா இருக்கு’ என இயக்குநர் மித்ரன் ஜவகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாரப்ப விலக்கி நச்சின்னு காட்டுறியே!.. பிக் சைஸ் மனச காட்டி இழுக்கும் ரேஷ்மா…

Published by
சிவா