sen
பொல்லாதவன், கழுகு, தனிக்காட்டு ராஜா, மூன்று முகம் உள்ளிட்ட பல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் வில்லன் நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தூள் கிளப்பிய மறைந்த பழம்பெரும் நடிகர் செந்தாமரையை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை அவரது மனைவியும் நடிகையுமான கெளசல்யா செந்தாமரை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எடுத்துக்கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
1935ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி கல்யாணராமன் செந்தாமரையாக காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே போலீஸ் அதிகாரியாகவும், ரவுடியாகவும் முரட்டுத்தனமான கேரக்டர்களில் நடித்து பட்டையைக் கிளப்பினார். 1957ம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் செந்தாமரை.
இதையும் படிங்க: கமலின் படத்தை பார்த்துவிட்டு நைட் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு போன ரஜினி!.. நடந்தது இதுதான்!…
மூன்று முகம் வில்லன்:
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களின் படங்களில் துணை நடிகராகவும் வில்லன் க்ரூப் ஆளாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வந்த செந்தாமரை நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் மிரட்டல் வில்லனாகவே மாறியிருந்தார்.
அதிலும், மூன்றுமுகம் படத்தில் ஏகாம்பரம் எனும் கதாபாத்திரத்தில் செந்தாமரை நடித்த வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். இந்நிலையில், அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை கெளசல்யா செந்தாமரை சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது கணவர் செந்தாமரை பற்றியும் இருவருக்கும் இடையே எப்படி பழக்கம் ஏற்பட்டது, திருமணம் நடைபெற யார் காரணம் உள்ளிட்ட பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்த கெளசல்யா 8 வயதிலேயே முத்தம்மா எனும் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லையாம். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர் நாடகங்களில் நடித்து வந்த போது செந்தாமரையை சந்தித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிரதாப் போத்தனை பழிவாங்க இப்படியெல்லாமா செய்வாங்க? சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகாதான்
செந்தாமரை – கெளசல்யா காதலும் திருமணமும்:
ஆனால், முதலில் செந்தாமரையின் முரட்டுத்தனமான தோற்றத்தை பார்த்து அவரை இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இவரது குறும்புத்தனத்தை பார்த்து செந்தாமரையும் திட்டுவாராம். ஒரு முறை புத்தக வாசிப்பு பழக்கத்தால் தன்னிடம் இருந்து செந்தாமரை புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றிருந்தார். புத்தகத்தை படித்து விட்டு அதை கொடுக்க தெரியாத்தனமாக என் வீட்டிற்கே வந்த நிலையில், எங்கள் வீட்டில் அவருக்கு செம திட்டு விழுந்து விட்டது. எப்படி ஒரு பெண்ணை பார்க்க அவ வீட்டுக்கே வருவ என்றெல்லாம் கேட்டு திட்டியிருக்காங்க, நாடகம் நடக்கும் இடத்தில் என்னை அவர் சந்தித்து புத்தகத்தை கொடுத்து விட்டு திட்டு வாங்கிய கதையை சொல்லும் போதே அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.
sen1
ஆனால், லலிதா என்கிற தோழி ஒருவர் மூலமாக எனக்கு பழக்கம் ஏற்பட்ட போது தான், இவன் ரொம்ப நல்ல பையன் திருமணம் செய்துக்கோ என சொன்னார்கள். முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவங்க நம்பிக்கையா சொன்ன பிறகு அப்படியே பேசி திருமணம் செய்துக் கொண்டோம். அவர் இருந்த வரைக்கும் என்ன ஒரு ராணி போலவே பார்த்துக் கொண்டார். சினிமாவில் வில்லனாக நடித்தாலும் எனக்கு அவர் தான் ரியல் லைஃப் ஹீரோ என கெளசல்யா செந்தாமரை தங்கள் காதல் வாழ்க்கையையும் திருமணம் ஆன கதையையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…